Saturday, November 29, 2008

வலி...

வலி...

உலகத்திலேயே ரொம்பவும் பெரிய வலி என்றால் மன வலினு தான் சொல்ல முடியும்.நம் உடல் உபாதையால் ஏற்படும் வலி அதற்கான மருந்துக்களை சாப்பிட்டுவிட்டால் குணமடைந்துவிடும் ஆனால் மனதால் ஏற்படும் வலி எப்பொழுது நமது மனோவலிமை பெருகிறதோ , அப்பொழுதுதான் அவ்வலி குணமடையும்.
ஆனால் எப்பொழுது அந்த வலியால் ஒருவர் மறக்கமுடியாமல் அவஸ்தை படுகிறாரோ, மன வலியால் அவரால் எப்பொழுதுமே குணமடைய முடியாது.வாழ்க்கையில் எல்லோரும் எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்த்து ஏமாறுவதை விட எந்த ஒரு எதிர்ப்பார்ப்புகளும் இல்லாத ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
என்னுடைய லோகிக் மிகவும் ஈஸி. ஒரு சம்பவம் நடக்கும் பொழுது அந்த சம்பவத்தில் என்னை புகுர்த்தி பார்ப்பேன். பிறகு உண்மையான சம்பவத்தின் முடிவை வேறுபடுத்தி பார்ப்பேன்.
எப்பொழுதும் நான் நினைப்பது போல முடிவு இருப்பதில்லை. அதனாலேயே என்னை நான் வம்புக்குள் மாட்டிக் கொள்வது. அனைவரும் சமம் இல்லை என்பது எனக்கு தெரிந்த ஒன்றே. ஆனால் ஏன் அவர்கள் அந்த முடிவை எடுத்தார்கள் என்பது எனக்கு லோகிக்காக படவில்லை என்றால் மண்டையே வெடித்துவிடும் போல இருக்கும்.
ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ள் மௌன‌ங்க‌ள் அமைதி த‌னிமை எல்லாம் மிக‌வும் கொடூர‌மாக‌ இருக்கும்ஆனால் நமது மௌனங்களை பிறர் தவறாக கூட எடுத்துக்கொள்ளலாம். நீ ஒரு அடங்கா பிடாரி..பிறரை மதிக்க தெரியாதவள் என.
அதே வேளையில், எவ்வளவு நாள்தான் மனதிலேயே அனைத்தும் வைத்திருக்க முடியும்?என்றாவது ஒரு நாள் சொல்லிவிட்டாள் நமக்கு கிடைக்கும் பட்டம் மனதில் தாங்காது...

No comments: