
அலைகளின் ஓசை-1
கடற்கரையில் தனிமையில் இருந்தாலும், அவளுக்குள் தனிமை கிடைக்கவில்லை. அவளது மனத்துக்குள் நிம்மதியில்லை. எப்பொழுதும் கல கல என சிரிப்புக்கே தேவதையாக இருக்கும் அவளுள் இப்பொழுது சிரிப்பு அவளுக்கு எதிரியாக தெரிந்தது.
எங்கே சென்றது அவளது புன்னகை? அலைகளின் ஓசைகளில் எப்பொழுதும் நிம்மதியைக் காணும் அவள், அன்று அலைகளின் ஓசையைக் கண்டாலே காதை பொத்திக் கொண்டாள். அலைகளை சத்தம் போடாதே என கத்த வேண்டும் போல இருந்தது.
என்ன இருந்தாலும் அவள் அப்படி பேசியிருக்கக் கூடாது. நாங்கள் என்ன பிறந்ததில் இருந்து அப்படியா பழகியிருக்கிறோம். மனது அந்த அலைகளை விட வேகமாக அலசியாது.
கடவுளே என்னை நித்தம் நித்தம் கொல்வதை விட, ஒரேடியாக என்னை கொன்றுவிடு.
கதரி கதரி அழுதாள், அவளுக்காக ஆறுதலாக இருந்தது கடற்கரையிலிருந்த காலடிகள் மட்டுமே.
[தொடரும்]
அன்புடன்
பார்த்தசாரதி பரமேஸ்வரி
பார்த்தசாரதி பரமேஸ்வரி
No comments:
Post a Comment