Friday, February 27, 2009

அஞ்சலை...

அஞ்சலை...



மனது ரொம்ப வருத்திக் கொண்டு பார்த்த பாடல் இது. அழகான வரிகள், இறந்து போன காதலிக்காக, ஆருயிர் காதலன் படிக்கும் பாடல். அதுவும் குடி போதையில் பிறகு ஒரு போதை பித்தனாய்.

காதலுக்கு கண் மட்டுமல்ல மூளையும் இல்லைனு நினைக்கிறேன். அது எப்படி ஊயிருக்கு ஊயிராய் காதலித்த பெண் இறப்புக்கு பிறக்கு இப்படி திரிய முடிகிறது? காதலி இறந்துவிட்டால் இனி எப்படி வேண்டுமென்னாலும் இருக்கலாம் என்று முடிவெடுத்து விடுவதா?

ஆருயிராய் காதலித்தவளின் எண்ணம் எப்படி இருக்கும் என்று கூடவா சிந்திக்க முடியவில்லை? என‌து பாதியின‌ரிட‌ம் கேட்டால், காத‌ல் மூளையில் இருந்துவ‌ருவ‌தில்லை ம‌ன‌சில் இருந்துவ‌ருவ‌து. மிக‌ முக்கிய‌மாக‌ ஆண்க‌ளுக்கு என்று.

ச‌ற்று யோசித்தேன். ஆம், பெண்க‌ளா இப்ப‌டி திருந்து அலைந்துக் கொண்டிருக்கிறார்க‌ள். முக்கால் வாசி அனைவரும் இறந்த காதலின் நினைவாக திருமண செய்யாமல் இருக்கிறார்கள். ஏனுங்க இவ்வங்கள மட்டும் இப்படி செய்யுராங்க?

No comments: