முன்பே எழுதியிருக்க வேண்டிய பதிவு, நேரமின்மையால் எழுத முடியவில்லை. வீட்டைக் கட்டிப்பார் கல்யாணாம் செய்த்துப்பார் என்று சொல்வார்கள். இந்த இரு செயல்களையும் செய்து முடித்தால் வாழ்க்கையில் பாதி பொறுப்புகளை செய்துமுடித்துவிட்டதாக என்னலாம்.
முன்பு எல்லாம், மாப்பிளை / பெண் பார்ப்பதிலிருந்து, திருமணநாள், திருமண மண்டபம் மற்றும் சாப்பாடு என அனைத்தையும் கன்காணிப்பது பெற்றோர்களின் பொறுப்பாக இருந்தது. பிள்ளைகளின் திருமணத்தை செய்து முடித்துவிட்டால் வாழ்க்கையில் தனது கடமைகள் முடிந்துவிட்டதாக என்பார்கள்.
தற்சமயம், தனது வாழ்க்கை துணையிலிருந்து, திருமண மண்டபம், சாப்பாடு , அலங்காரம் என அனைத்தையும் திருமண புரிபவர்களே செய்வதால் , திருமணத்தை செய்து முடிக்க பெற்றோர்களின் பொறுப்புகளை அவர்கள் நன்கு புரிந்துக்கொள்கிறார்கள்.
திருமணம்

எனது தோழிகளின் வட்டாரத்தில் இரண்டு பேர் மட்டுமே இதுவரை திருமணம் செய்துள்ளனர். எனது நெருங்கிய தோழி வட்டாரத்தில் யாருமே இதுவரை திருமணம் செய்ததில்லை. பெண்களில் திருமண வயது 21 என சொல்வார்கள். ஆனால் எங்களது வயதோ முப்பதை தொட இன்னும் இரண்டு மூன்று வருடங்களே உள்ளன ஆனால் திருமணத்தை நோக்கி செயல்படுபவர்கள் குறைவே. நேரமின்மை, இன்னும் வாழ்க்கையின் துணையை தேர்ந்தெடுக்கவில்லை, பல சுமைகள் என தங்களுக்கென பல காரணங்களுடன் அவர்களின் திருமண வாழ்க்கை இன்னும் ஆரம்பமாக வில்லை.
வாழ்க்கை துணைமட்டுமே தேர்ந்தெடுத்தால் போதுமா? இருவரும் எப்பொழுது மனதளவின் திருமண பந்ததில் இணைய முடியும் என பார்க்க வேண்டாமா? ஆனால் என்னை பொருத்தமட்டில் எப்பொழுதுமே நாம் திருமண பந்ததில் இணைவதற்கு முழு சம்மதம் தருவது கடினம். வாழ்க்கை எனும் ஓடம் எப்படி போகிறதோ அப்படிதான் நாமும் அதை ஓட்ட முடியும் அல்லவா?
No comments:
Post a Comment