எங்கள் குட்டியின் பதிமூன்றாவது பிறந்தநாள். அவள் பிறந்து பதிமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன என என்னால் நம்ப முடியவில்லை.
அவளை பிறந்த பொழுது தூக்கியது நினைவில் இன்றும் இருக்கிறது. பிங் நிறத்தில் இருந்தாள். கைக் குழந்தைகளை தூக்குவது என்றால் எனக்கு ஒரு பயம். என் கைகளின் இடுக்குகள் வழியாக அந்த சிறு உருவம் கீழே விழுந்துவிடுமோ என்ற பயம். அம்மா அடிக்கடி நினைவுறுத்தும் அறிவுரை, பிள்ளைகளின் தலையை நன்றாக பிடிக்க வேண்டும் இல்லையேல் உறம் விழுந்துவிடும் என. உறம் என்றால் சுளுக்கு என நினைக்கின்றேன்.
பெரியவர்களாக இருக்கும் நமக்கே சுளுக்கு பிடித்தால் அதன் வலியை தாங்க முடியாது. பிஞ்சுகள் , அதுவும் எங்கே உறம் இருக்கு என நமக்கு சொல்லத் தெரியாத அந்த பிஞ்சுகளுக்கு உறம் விழுந்தால் எப்படி இருக்கும் ? இப்படியாக கைக்குழந்தையான இருந்த அந்த குட்டியைதான் முதலில் தூக்கினேன். தூக்கியவுடனே "வீர்" என்று அழ ஆரம்பித்துவிட்டாள். என்ன செய்வது என தெரியாமல் அப்படியே கீழே அவளை வைத்துவிட்டேன். முகம் , உடம்பெல்லாம் சிவப்பு வரணத்தில் மாறிவிட்டன. எனக்கோ சரியான பயம். என்னால் ஏதாவது ஆகிவிட்டதா என.
இப்படிதான் எங்களது தொடர்பு ஆரம்பித்தது. என் அத்தைவீட்டில் வளர்ந்தால் அந்த செல்லம். ஆனால் அவர்கள் வேலைக்குச் சொல்லும் பொழுது அவளை பார்த்துக் கொண்டது நாங்கள் தான். பிள்ளைகளை அடித்து வளர்ப்பதை விட அன்பால் வளர்ப்பது தான் முறை என என் பெற்றோர்களின் நம்பிக்கை. எங்களை என் பெற்றோர்கள் திட்டினார்கள் என்றால் அதை விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அடிக்காத பெற்றோர்கள் , அன்பாக பேசுபவர்கள், இம்மாதிரி இருந்தால் எந்த குழந்தைதான் பாசத்தால் எங்களிடம் இணையாது? இந்த குட்டியும் அப்படிதான். அப்பாவுடன் சேர்ந்து ஒரு மணிநேரம் சாமி கும்பிடுவாள். காயத்திரி மந்திரத்தின் மேல் இவளுக்கு அலாதி நம்பிக்கை.
ஓம் பூர் புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹிதியோ
யோன: ப்ரசோதயாத்
ஒரு முறை அவளது காலில் அடிப்பட்டது என அவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்த பொழுது. இந்த மந்திரத்தை சொல்லும்மா சீக்கிரம் குணமாகும் என சொன்னார் என் அம்மா. அவளும் அதை செய்தால். அவள் மனமுடைந்த பொழுது அவளுக்கு உறுதுணையாக இருந்தது இந்த மந்திரம் தான்.
எங்களுள் ஒருவராய் வளர்ந்தவளுக்கு பிறந்தநாள்.
[தொடரும்]
அன்புடன்
அன்புடன்
சாரம்பதி
No comments:
Post a Comment