Sunday, November 23, 2008

ஒரு இதயம்...


ஒரு இதயம்...



வெள்ளிக்கிழமை மதிய உணவை பெரும்பாலும் நாங்கள் வெளியில் சாப்பிடுவது வழக்கம். அன்றாடம் அந்த நான்கு சுவத்துக்குள் சாப்பிடுவது சற்று கடுப்பாக இருந்தது. அதற்காக நானும் என் தோழியும் எடுத்துக் கொண்ட முடிவு.அதுவும் அம்மாவும் எனக்காக காலை ஐந்துக்கே உணவை தயாரிக்க தேவையில்லை என்பதும் ஒரு காரணமாகும்.


சென்ற வெள்ளியன்று எனது தோழியின் நண்பரும் எங்களுடன் சேர்ந்துக் கொண்டார். அன்று நாங்கள் ஒரு விரைவு உண்வகத்திற்கு சென்றோம்.எப்பொழுதும் போல அரட்டைதான். அப்பொழுது ஒரு வெள்ளைக்கார பெண்மணி ஒருவர் மேஜையின் மேல் இரண்டு கீ செய்யினை வைத்து ஒரு அட்டையும் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.


என்ன‌டா அது என‌ நான் எடுத்து பார்த்தேன். அந்த‌ அட்டையிலோ, அவ‌ர் வாய் பேச‌முடியாத‌ காது கேட்க‌ முடியாத‌வ‌ர் அத‌னால் இம்மாதிரியான‌ கீ செய்யினை [ கை விணை பொருட்க‌ள்] விற்ப‌தாக‌வும் அந்த‌ அட்டையில் எழுதியிருந்த‌து. ஒரு கீ செய்யின் ஆறு ரிங்கிட்டும் இர‌ண்டு ப‌த்து ரிங்கிட் என‌ எழுதியிருந்த‌து.


அந்த‌ விரைவு உண‌வ‌க‌மும் என‌க்கும் ச‌ற்று சென்டி மெண்ட் அதிக‌ம். அதே உண்வ‌க‌த்தில் எங்க‌ள் செல்ல‌ குட்டியுட‌ன் சாப்பிடும் பொழுது இதே மாதிரி இருவ‌ரிட‌ம் கைவிணை பொருட்க‌ளை வாங்கியிருக்கிறோம்.அந்த‌ குட்டியின் ஞாப‌க‌ம் அதிக‌மாகிவிட்ட‌து.


ஒரு இத‌ய‌ம் போட்ட‌ ஒரு கீ செய்யினை வாங்கிவிட்டேன். என‌து குட்டியின் ஞாப‌க‌மாக‌....


எங்க‌ள் இத‌ய‌த்தில் என்றும் இருக்கும் எங்க‌ள் குட்டி பெண். அவ‌ளுக்காக‌ இந்த‌ ப‌திவு.
அன்புடன்
சாரம்பதி

No comments: