
மன்னித்துவிடு...
மிகவும் வேதனையுடன் எழுதுகிறேன். மன்னித்துவிடு எனும் இந்த வார்த்தைகள் சொல்வது எவ்வளவு சுலபம். ஆனால் அந்த வார்த்தையால் மட்டும் நாம் பிறரது மனதை புண்படுத்தியது ஆர முடியுமா?
முடியாதுதான் . ஆனால் மன முவர்ந்து மன்னித்துவிடு எனும் சொல்லும் பொழுது நாம் என்ன செய்ய முடியும்? அதே மாதிரி மனதை ஏற்கனவே புண்படுத்தியதுதானே மனதிற்கு தெரிகிறது.
பல சமயங்களில் நான் கடவுளிடம் வேண்டிக் கொள்வது. "இறைவா எனக்கு ஞாபக மறதியைக் கொடு" . இம்மாதிரி மன வேதனைகளை தாங்கிக் கொள்ளும் சக்தி எனது சிந்தனைகளுக்கு மிகவும் கடினமாக கொண்டிருக்கிறது.
மூளை வலித்து வெடித்துவிடுவது போல வேதனைகளை சில சமயங்கள் வருவதுண்டு.சாரதி அடிக்கடி கூறுவது நான் பார்த்து பழகிய பெண் நீ அல்ல. அவள் தைரிய சாலி மிகவும் அமைதியானவள். நீயோ கோபக்காரி கோழையாகிவிட்டாய் என.
சாரதிக்கு தெரியுமா இந்த மாற்றங்களை நானே விரும்பியதல்ல என. கோழையாகிவிட்டால் கோபமும் அதிகம் வரும் என. ஏன்? தனது கோழைதனத்தை மறைக்க கோபம் தான் உதவும்.
No comments:
Post a Comment