Saturday, November 29, 2008

வலி...

வலி...

உலகத்திலேயே ரொம்பவும் பெரிய வலி என்றால் மன வலினு தான் சொல்ல முடியும்.நம் உடல் உபாதையால் ஏற்படும் வலி அதற்கான மருந்துக்களை சாப்பிட்டுவிட்டால் குணமடைந்துவிடும் ஆனால் மனதால் ஏற்படும் வலி எப்பொழுது நமது மனோவலிமை பெருகிறதோ , அப்பொழுதுதான் அவ்வலி குணமடையும்.
ஆனால் எப்பொழுது அந்த வலியால் ஒருவர் மறக்கமுடியாமல் அவஸ்தை படுகிறாரோ, மன வலியால் அவரால் எப்பொழுதுமே குணமடைய முடியாது.வாழ்க்கையில் எல்லோரும் எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்த்து ஏமாறுவதை விட எந்த ஒரு எதிர்ப்பார்ப்புகளும் இல்லாத ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
என்னுடைய லோகிக் மிகவும் ஈஸி. ஒரு சம்பவம் நடக்கும் பொழுது அந்த சம்பவத்தில் என்னை புகுர்த்தி பார்ப்பேன். பிறகு உண்மையான சம்பவத்தின் முடிவை வேறுபடுத்தி பார்ப்பேன்.
எப்பொழுதும் நான் நினைப்பது போல முடிவு இருப்பதில்லை. அதனாலேயே என்னை நான் வம்புக்குள் மாட்டிக் கொள்வது. அனைவரும் சமம் இல்லை என்பது எனக்கு தெரிந்த ஒன்றே. ஆனால் ஏன் அவர்கள் அந்த முடிவை எடுத்தார்கள் என்பது எனக்கு லோகிக்காக படவில்லை என்றால் மண்டையே வெடித்துவிடும் போல இருக்கும்.
ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ள் மௌன‌ங்க‌ள் அமைதி த‌னிமை எல்லாம் மிக‌வும் கொடூர‌மாக‌ இருக்கும்ஆனால் நமது மௌனங்களை பிறர் தவறாக கூட எடுத்துக்கொள்ளலாம். நீ ஒரு அடங்கா பிடாரி..பிறரை மதிக்க தெரியாதவள் என.
அதே வேளையில், எவ்வளவு நாள்தான் மனதிலேயே அனைத்தும் வைத்திருக்க முடியும்?என்றாவது ஒரு நாள் சொல்லிவிட்டாள் நமக்கு கிடைக்கும் பட்டம் மனதில் தாங்காது...

Tuesday, November 25, 2008

மன்னித்துவிடு...


மன்னித்துவிடு...



மிகவும் வேதனையுடன் எழுதுகிறேன். மன்னித்துவிடு எனும் இந்த வார்த்தைகள் சொல்வது எவ்வளவு சுலபம். ஆனால் அந்த வார்த்தையால் மட்டும் நாம் பிறரது மனதை புண்படுத்தியது ஆர முடியுமா?


முடியாதுதான் . ஆனால் ம‌ன‌ முவ‌ர்ந்து ம‌ன்னித்துவிடு எனும் சொல்லும் பொழுது நாம் என்ன‌ செய்ய‌ முடியும்? அதே மாதிரி ம‌ன‌தை ஏற்க‌ன‌வே புண்ப‌டுத்திய‌துதானே ம‌ன‌திற்கு தெரிகிற‌து.


ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் நான் க‌ட‌வுளிட‌ம் வேண்டிக் கொள்வ‌து. "இறைவா என‌க்கு ஞாப‌க‌ ம‌ற‌தியைக் கொடு" . இம்மாதிரி ம‌ன‌ வேத‌னைக‌ளை தாங்கிக் கொள்ளும் ச‌க்தி என‌து சிந்த‌னைக‌ளுக்கு மிக‌வும் க‌டின‌மாக‌ கொண்டிருக்கிற‌து.


மூளை வ‌லித்து வெடித்துவிடுவ‌து போல‌ வேத‌னைக‌ளை சில‌ ச‌ம‌ய‌ங்க‌ள் வ‌ருவ‌துண்டு.சார‌தி அடிக்க‌டி கூறுவ‌து நான் பார்த்து ப‌ழ‌கிய‌ பெண் நீ அல்ல‌. அவ‌ள் தைரிய‌ சாலி மிக‌வும் அமைதியான‌வ‌ள். நீயோ கோப‌க்காரி கோழையாகிவிட்டாய் என‌.


சார‌திக்கு தெரியுமா இந்த மாற்றங்களை நானே விரும்பியதல்ல என. கோழையாகிவிட்டால் கோப‌மும் அதிக‌ம் வ‌ரும் என‌. ஏன்? த‌ன‌து கோழைத‌ன‌த்தை மறைக்க கோபம் தான் உதவும்.

Sunday, November 23, 2008

ஒரு இதயம்...


ஒரு இதயம்...



வெள்ளிக்கிழமை மதிய உணவை பெரும்பாலும் நாங்கள் வெளியில் சாப்பிடுவது வழக்கம். அன்றாடம் அந்த நான்கு சுவத்துக்குள் சாப்பிடுவது சற்று கடுப்பாக இருந்தது. அதற்காக நானும் என் தோழியும் எடுத்துக் கொண்ட முடிவு.அதுவும் அம்மாவும் எனக்காக காலை ஐந்துக்கே உணவை தயாரிக்க தேவையில்லை என்பதும் ஒரு காரணமாகும்.


சென்ற வெள்ளியன்று எனது தோழியின் நண்பரும் எங்களுடன் சேர்ந்துக் கொண்டார். அன்று நாங்கள் ஒரு விரைவு உண்வகத்திற்கு சென்றோம்.எப்பொழுதும் போல அரட்டைதான். அப்பொழுது ஒரு வெள்ளைக்கார பெண்மணி ஒருவர் மேஜையின் மேல் இரண்டு கீ செய்யினை வைத்து ஒரு அட்டையும் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.


என்ன‌டா அது என‌ நான் எடுத்து பார்த்தேன். அந்த‌ அட்டையிலோ, அவ‌ர் வாய் பேச‌முடியாத‌ காது கேட்க‌ முடியாத‌வ‌ர் அத‌னால் இம்மாதிரியான‌ கீ செய்யினை [ கை விணை பொருட்க‌ள்] விற்ப‌தாக‌வும் அந்த‌ அட்டையில் எழுதியிருந்த‌து. ஒரு கீ செய்யின் ஆறு ரிங்கிட்டும் இர‌ண்டு ப‌த்து ரிங்கிட் என‌ எழுதியிருந்த‌து.


அந்த‌ விரைவு உண‌வ‌க‌மும் என‌க்கும் ச‌ற்று சென்டி மெண்ட் அதிக‌ம். அதே உண்வ‌க‌த்தில் எங்க‌ள் செல்ல‌ குட்டியுட‌ன் சாப்பிடும் பொழுது இதே மாதிரி இருவ‌ரிட‌ம் கைவிணை பொருட்க‌ளை வாங்கியிருக்கிறோம்.அந்த‌ குட்டியின் ஞாப‌க‌ம் அதிக‌மாகிவிட்ட‌து.


ஒரு இத‌ய‌ம் போட்ட‌ ஒரு கீ செய்யினை வாங்கிவிட்டேன். என‌து குட்டியின் ஞாப‌க‌மாக‌....


எங்க‌ள் இத‌ய‌த்தில் என்றும் இருக்கும் எங்க‌ள் குட்டி பெண். அவ‌ளுக்காக‌ இந்த‌ ப‌திவு.
அன்புடன்
சாரம்பதி

Wednesday, November 12, 2008

நாங்கள் இல்லாத பிறந்தநாள்...

நாங்கள் இல்லாத பிறந்தநாள்...




சென்ற ஆண்டு குமரியாக, குடும்பத்தினருடன் கொண்டாடிய பிறந்தநாள், இவ்வருடம் திருமதியாக நீங்கள் இருவரும் அங்கிருக்கையில், இங்கு பெற்றோர்களும் நானும் உங்களை மனமுவற வாழ்த்துகின்றோம் அக்கா.

வாழ்க்கை ஒரு சக்கரம் என்றார்களே, அன்று என்னக்குப் புரியவில்லை. இன்று நாங்கள் மூவரும் இங்கு உனக்கு கண்னியின் மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டோம். முன்பு நாம் அனைவரும் கணினியின் முன் இருந்தோம்.இப்பொழுது நாம் கணினியில் எதிர் திசையிலிருந்து வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டோம்.


எங்கிருந்தால் என்ன? அனைவரும் உள்ளத்தால் ஒன்றாக தானே இருக்கின்றோம். இறைவனின் கிருபையால் அனைவரும் ஒரே இடத்திலிருந்து கொண்டாட வேண்டுகிறேன்...