ரோஜாவே

பெண்களை உள்ளங்கவர்ந்த பூக்களில் ரோஜாவிற்கு தான் எப்பொழுது முதலிடம். அதன மனம், அதன் இதழின் மென்மை என அனைத்துமே பெண்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவை. சிவப்பு, வெள்ளை , ஆரஞ்சு, நீலம் என அதன வர்ணங்களை நாம் எண்ணிக் கொண்டே போகலாம்.
இந்த பதிவு ரோஜா பூவை பற்றியது அல்ல.
நமது தோழரின் பதிவின் ஒரு தொடர்ச்சி. என்ன தொடர்ச்சி என கூறியதுடன் எது என்ன யோசிக்கிறீர்களா? ஒரு வருடத்திற்கு முன் எழுதிய எழுத்தின் தொடர்ச்சி.
ஒரு வருடம் , அவர்களிருவரும் ஒன்றாக தங்களின் உற்ற தோழர் தோழியாக இருந்து. அவர்களின் உறவு மென்மேலும் வளர எங்களின் வாழ்த்துகள். [ அப்புரம் நாங்க மட்டும் கல்யாணம் செய்து கஷ்ட படனும்னு நம் தோழர் அடிக்கடி சொல்லுவாரு , அதான் சீக்கிரம் அவரும் திருமண பந்ததில் இணைய வாழ்த்துகள்].
மணி காலை பதினொன்று, முக்கியமான வேலையில் இருக்கும் பொழுது , ஸ்கைப் மின்னியது,
தோழர்: "உங்களுக்கு எங்கே ரோஜா கொத்து வாங்கலாம் என தெரியுமா?
நான் [மனதில்]: எனக்கு எப்படி தெரியும்? நான் யாருக்கு வாங்கியிருக்கேன்?நான்: ஆன்லைனில் வேண்டுமா ? நான் தேடி தரவா?
தோழர்: எனக்கு நூறு ரோஜா வேண்டும். அதான் கேற்குறேன்.
நான்: நூறா? யாருக்கு? உற்ற தோழிக்கா? பிறந்த நாளா?
தோழர்: ஹீ ஹீ ஆமாம் [ ஸ்கைப்ல அசடு வழிந்தார்]
நான்: அப்பொ நீங்க நேரடியா தான் வாங்கனும் . நூறு சரியான விலையாகுமே?
தோழர்: லன்ச் நேரம் நாம் மீட் பன்னலாமா? எனக்கு கொஞ்சம் உதவி வேண்டுமே.
நான்: கண்டிப்பா வரேன். 12 மணிக்கு சந்திக்கலாம்.
அது என்ன நூறு என நான் சில தகவல்களை தேடினேன். அப்பொழுதுதான் ஒவ்வொரு வர்ண ரோஜாக்களும் ஒரு பொருளை கொண்டிருக்கிறது என்பதும், ரோஜாவின் எண்களும் ஒரு நோக்கத்தை குறிக்கிறது என்றும்.
1 ரோஜா கண்டவுடன் காதல்
3 ரோஜா நான் உன்னை காதலிக்கிறேன்
15 ரோஜா என்னை நீ மன்னித்துவிடு
36 ரோஜா நாம் ஒன்றாக இருந்த நேரத்தை நான் மறக்க மாட்டேன்
99 ரோஜா என் உயிர் இருக்கும் வரை உன்னை நான் காதலிப்பேன்
100 ரோஜா கடைசிவரைக்க்கும் நாம் ஒன்றாக இருப்போம்.

நானும் சீக்கிரம் அலுவலகத்தை விட்டு கிளம்பி தோழரை சந்திக்க சென்றேன். அவரும் அங்கு வருவதற்கு நேரம் சரியாக இருந்தது.
அவர் ஏற்கனவே வாங்கியா அதே கடைக்குச் சென்றோம். நூறு ரோஜா எவ்வளவு என கேட்டோம். அதன் விலையைக் கேட்டு வாயைத்தான் பிளந்தோம். ஹா ஹா . எண்ணம் மணி அடித்தது [ஐடியா மணி].
அவர் ஏற்கனவே வாங்கியா அதே கடைக்குச் சென்றோம். நூறு ரோஜா எவ்வளவு என கேட்டோம். அதன் விலையைக் கேட்டு வாயைத்தான் பிளந்தோம். ஹா ஹா . எண்ணம் மணி அடித்தது [ஐடியா மணி].
தோழரே நூறு ரோஜா இப்பொழுதே வேண்டுமா? இப்பொழுது சிறிய அளவு கொடுங்களேன். உங்கள் திருமண அன்று நீங்கள் நூறு கொடுக்கலாமே? அவரும் அதை அமோதித்து 36 ரோஜா , சிவப்பு ரோஜா வாங்கினார்.
நேரமின்மையால் நான் அந்த பூங்கொத்து கிடைக்கும் வரை காத்திருக்கவில்லை :( . நமது தோழரி இன்று உற்ற தோழிக்கு அதனை கொடுத்து பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருப்பார். அவர்களிருவருக்கும் வாழ்த்துகள்.
நேரமின்மையால் நான் அந்த பூங்கொத்து கிடைக்கும் வரை காத்திருக்கவில்லை :( . நமது தோழரி இன்று உற்ற தோழிக்கு அதனை கொடுத்து பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருப்பார். அவர்களிருவருக்கும் வாழ்த்துகள்.
அன்புடன்
சாரம்பதி
No comments:
Post a Comment