Monday, April 13, 2009

சின்ன சின்ன வாண்டுகள்..

சின்ன சின்ன வாண்டுகள்..

எங்கள் குட்டியின் பதிமூன்றாவது பிறந்தநாள். அவள் பிறந்து பதிமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன என என்னால் நம்ப முடியவில்லை.


அவளை பிறந்த பொழுது தூக்கியது நினைவில் இன்றும் இருக்கிறது. பிங் நிறத்தில் இருந்தாள். கைக் குழந்தைகளை தூக்குவது என்றால் எனக்கு ஒரு பயம். என் கைகளின் இடுக்குகள் வழியாக அந்த சிறு உருவம் கீழே விழுந்துவிடுமோ என்ற பயம். அம்மா அடிக்கடி நினைவுறுத்தும் அறிவுரை, பிள்ளைகளின் தலையை நன்றாக பிடிக்க வேண்டும் இல்லையேல் உற‌ம் விழுந்துவிடும் என. உறம் என்றால் சுளுக்கு என நினைக்கின்றேன்.

பெரியவர்களாக இருக்கும் நமக்கே சுளுக்கு பிடித்தால் அதன் வலியை தாங்க முடியாது. பிஞ்சுகள் , அதுவும் எங்கே உறம் இருக்கு என நமக்கு சொல்லத் தெரியாத அந்த பிஞ்சுகளுக்கு உறம் விழுந்தால் எப்படி இருக்கும் ? இப்ப‌டியாக‌ கைக்குழ‌ந்தையான‌ இருந்த‌ அந்த‌ குட்டியைதான் முத‌லில் தூக்கினேன். தூக்கிய‌வுடனே "வீர்" ‍என்று அழ‌ ஆர‌ம்பித்துவிட்டாள். என்ன‌ செய்வ‌து என‌ தெரியாம‌ல் அப்ப‌டியே கீழே அவ‌ளை வைத்துவிட்டேன். முக‌ம் , உட‌ம்பெல்லாம் சிவ‌ப்பு வர‌ண‌த்தில் மாறிவிட்ட‌ன‌. என‌க்கோ ச‌ரியான‌ ப‌ய‌ம். என்னால் ஏதாவ‌து ஆகிவிட்ட‌தா என‌.


இப்ப‌டிதான் எங்க‌ள‌து தொட‌ர்பு ஆர‌ம்பித்த‌து. என் அத்தைவீட்டில் வ‌ள‌ர்ந்தால் அந்த‌ செல்ல‌ம். ஆனால் அவ‌ர்க‌ள் வேலைக்குச் சொல்லும் பொழுது அவ‌ளை பார்த்துக் கொண்ட‌து நாங்க‌ள் தான். பிள்ளைக‌ளை அடித்து வ‌ள‌ர்ப்ப‌தை விட‌ அன்பால் வ‌ள‌ர்ப்ப‌து தான் முறை என‌ என் பெற்றோர்க‌ளின் ந‌ம்பிக்கை. எங்க‌ளை என் பெற்றோர்க‌ள் திட்டினார்க‌ள் என்றால் அதை விர‌ல் விட்டு எண்ணும் அள‌விற்குதான் அடிக்காத‌ பெற்றோர்க‌ள் , அன்பாக‌ பேசுப‌வ‌ர்க‌ள், இம்மாதிரி இருந்தால் எந்த‌ குழ‌ந்தைதான் பாச‌த்தால் எங்க‌ளிட‌ம் இணையாது? இந்த‌ குட்டியும் அப்ப‌டிதான். அப்பாவுட‌ன் சேர்ந்து ஒரு ம‌ணிநேர‌ம் சாமி கும்பிடுவாள். காய‌த்திரி ம‌ந்திர‌த்தின் மேல் இவ‌ளுக்கு அலாதி ந‌ம்பிக்கை.

ஓம் பூர் புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹிதியோ
யோன: ப்ரசோதயாத்

ஒரு முறை அவ‌ள‌து காலில் அடிப்ப‌ட்ட‌து என‌ அவ‌ள் அழுது ஆர்ப்பாட்ட‌ம் செய்த‌ பொழுது. இந்த‌ ம‌ந்திர‌த்தை சொல்லும்மா சீக்கிர‌ம் குண‌மாகும் என‌ சொன்னார் என் அம்மா. அவ‌ளும் அதை செய்தால். அவ‌ள் ம‌ன‌முடைந்த‌ பொழுது அவ‌ளுக்கு உறுதுணையாக‌ இருந்த‌து இந்த‌ ம‌ந்திரம் தான்.
எங்க‌ளுள் ஒருவ‌ராய் வ‌ள‌ர்ந்த‌வ‌ளுக்கு பிற‌ந்த‌நாள்.

[தொட‌ரும்]
அன்புட‌ன்
சார‌ம்ப‌தி

Saturday, April 11, 2009

உன்னை நம்பி ஏலேலோ நான் இருக்கேன் ஐலசா

உன்னை நம்பி ஏலேலோ நான் இருக்கேன் ஐலசா

மண்ணை நம்பி ஏலேலோ மரம் இருக்கு ஐலசா

மரத்தை நம்பி ஏலேலோ கிளை இருக்கு ஐலசா

கிளையை நம்பி ஏலேலோ இலை இருக்கு ஐலசா

இலையை நம்பி ஏலேலோ காய் இருக்கு ஐலசா

காய்யை நம்பி ஏலேலோ கனி இருக்கு ஐலசா கனியை நம்பி ஏலேலோ நீ இருக்காய் ஐலசா

உன்னை நம்பி ஏலேலோ நான் இருக்கேன் ஐலசா..

பி.கு:‍ மக்கள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியின் பொழுது சில சிட்டுகள் பாடிய தமிழ் பாடல் இது.அவர்களின் பாட்டு என் காதில் இனிமையாய் ஒலிக்கிறது







Wednesday, April 8, 2009

டும் டும் டும் -1

டும் டும் டும் -1

முன்பே எழுதியிருக்க வேண்டிய பதிவு, நேரமின்மையால் எழுத முடியவில்லை. வீட்டைக் க‌ட்டிப்பார் க‌ல்யாணாம் செய்த்துப்பார் என்று சொல்வார்க‌ள். இந்த‌ இரு செய‌ல்க‌ளையும் செய்து முடித்தால் வாழ்க்கையில் பாதி பொறுப்புக‌ளை செய்துமுடித்துவிட்ட‌தாக‌ என்ன‌லாம்.

முன்பு எல்லாம், மாப்பிளை / பெண் பார்ப்ப‌திலிருந்து, திருமண‌நாள், திருமண‌ ம‌ண்ட‌ப‌ம் ம‌ற்றும் சாப்பாடு என‌ அனைத்தையும் க‌ன்காணிப்ப‌து பெற்றோர்க‌ளின் பொறுப்பாக‌ இருந்த‌து. பிள்ளைக‌ளின் திரும‌ண‌த்தை செய்து முடித்துவிட்டால் வாழ்க்கையில் த‌ன‌து க‌ட‌மைக‌ள் முடிந்துவிட்ட‌தாக‌ என்பார்க‌ள்.
த‌ற்ச‌ம‌ய‌ம், த‌ன‌து வாழ்க்கை துணையிலிருந்து, திரும‌ண‌ ம‌ண்ட‌ப‌ம், சாப்பாடு , அல‌ங்கார‌ம் என‌ அனைத்தையும் திரும‌ண‌ புரிப‌வ‌ர்க‌ளே செய்வ‌தால் , திரும‌ண‌த்தை செய்து முடிக்க‌ பெற்றோர்க‌ளின் பொறுப்புக‌ளை அவ‌ர்க‌ள் ந‌ன்கு புரிந்துக்கொள்கிறார்க‌ள்.


திருமணம்










எனது தோழிகளின் வட்டாரத்தில் இரண்டு பேர் மட்டுமே இதுவரை திருமணம் செய்துள்ளனர். எனது நெருங்கிய தோழி வட்டாரத்தில் யாருமே இதுவரை திருமணம் செய்ததில்லை. பெண்களில் திருமண வயது 21 என சொல்வார்கள். ஆனால் எங்களது வயதோ முப்பதை தொட இன்னும் இரண்டு மூன்று வருடங்களே உள்ளன ஆனால் திருமணத்தை நோக்கி செயல்படுபவர்கள் குறைவே. நேர‌மின்மை, இன்னும் வாழ்க்கையின் துணையை தேர்ந்தெடுக்க‌வில்லை, ப‌ல‌ சுமைக‌ள் என‌ த‌ங்க‌ளுக்கென ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளுட‌ன் அவ‌ர்க‌ளின் திரும‌ண‌ வாழ்க்கை இன்னும் ஆர‌ம்ப‌மாக‌ வில்லை.

வாழ்க்கை துணைம‌ட்டுமே தேர்ந்தெடுத்தால் போதுமா? இருவ‌ரும் எப்பொழுது ம‌ன‌த‌ள‌வின் திரும‌ண ப‌ந்த‌தில் இணைய‌ முடியும் என‌ பார்க்க‌ வேண்டாமா? ஆனால் என்னை பொருத்த‌ம‌ட்டில் எப்பொழுதுமே நாம் திரும‌ண ப‌ந்த‌தில் இணைவ‌த‌ற்கு முழு ச‌ம்ம‌த‌ம் த‌ருவ‌து க‌டின‌ம். வாழ்க்கை எனும் ஓட‌ம் எப்ப‌டி போகிற‌தோ அப்ப‌டிதான் நாமும் அதை ஓட்ட‌ முடியும் அல்ல‌வா?