என்னையே நான் வெறுத்த நேரம் அப்பொழுது.. என் மேல் அன்பு செலுத்தியவர்களின் மேல் நான் வெறுப்பாக இருந்திருந்தேன். எத்தனை காலம் என்னால் இப்படி இருக்க முடியும்? என்னது எண்ணத்தையும் சிந்தனையும் சற்று மாற்ற நான் நமது கூகிளில் உலா வந்துக் கொண்டிருந்தேன். தமிழ் குழுமம் என நான் அச்சடித்து தேடிய பொழுது எனக்கு கிடைத்த இரண்டு பொக்கிஷங்கள் தான் முத்தமிழும் நம்பிக்கையும்.
முத்தமிழ், தமிழ் உள்ள எழுத்துக்கள் தான் என்னை ஈர்த்தன.. நம்பிக்கை, அது தான் எனக்கு அப்பொழுது தேவைப்பட்டது. அதுவும், என் மேல் நான் எரிச்சல் கொண்டிருந்த வேளையில் நம்பிக்கை மிகவும் முக்கியமே எனக்கு. எப்படி எழுதுவது? அதுவும் தமிழில்? தமிழ் எழுத்து என்னக்கு புதியது அல்ல. ஆனால் அவை எழுது வருடம் ஆறு ஆகிவிட்டன. என்ன செய்வது?
அதுமட்டுமில்லாமல் எப்படி தச்சு அடிப்பது? ம்ம் ஒரு மென்பொருளாளர் என்றாலும் இவை எனக்கு புதியதே.எனது கவனத்தை எழுதுவதில் செழுத்தினேன். ஒரு வாரம் ஒரு படைப்பு இதுதான் என்னுடைய முன்னால் குறிக்கோள். இப்பொழுது ஒரு மாதம் ஒரு படைப்பு என்பதே சிரமம் ஆகிவிட்டது. ஆனால் ஒன்று, அன்று எனக்கு தேவை பட்ட ஒரு மாறுதலை கொடுத்தது , இவ்விரு குழுமங்களே. அன்று தமிழ் அச்சடித்த நான், இன்றும் தொடர்கிறேன், இனி என்றும் தொடர்வேன் என் மூச்சிருக்கும்வறை..
அன்புடன்,
பார்த்தசாரதி பரமேஸ்வரி
1 comment:
என்னது எண்ணத்தையும் //
எனது
எழுத்து என்னக்கு புதியது//
எனக்கு
எப்படி தச்சு அடிப்பது?//
தட்டச்சு அடிப்பது
செழுத்தினேன்//
செலுத்தினேன்.
முன்னால் குறிக்கோள்//
முன்னாள்.
மூச்சிருக்கும்வறை..//
வரை.....
முயற்சி திருவினையாக்கட்டும்....
Post a Comment