Tuesday, June 10, 2008

சாரம்பதி

சாரம்பதி

உங்கள் அனைவரையும் இந்த வலைபதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. உங்களுடன் எங்களின் எண்ணங்களையும், எங்கள் வாழ்க்கையையும் சற்று பகிர்ந்துக் கொள்ளவே இந்த வலை. அனைத்தையும் படம் பிடித்து காட்ட இவ்வலை ஒரு கண்ணாடி அல்ல. ஆனால் இதுநாள் வரை நாங்கள் கடந்து வந்த காலம், இனியும் நாங்கள் உங்களுடன் கடக்க போகும் காலம், இவற்றை இப்பொழுதில் இருந்தே நாங்கள் பதிவு செய்தால் எங்களின் வயதான காலத்தில் ஒரு நினைவூட்டலாக இருக்கும் அல்லவா?


சற்று யோசித்துப் பாருங்கள், எங்கள் வயதான காலத்தில் நான் தட்டு தடுமாறி என்னது கணினியை "ஓன், " செய்து பிறகு எனது மூக்குக்கண்டாடியை போட்டுக் கொண்டு, இணயத்தில் இந்த வலையில் உலா வரும் பொழுது, கண்டிப்பாக நாங்கள் நடந்து வந்த பாதைகளை சற்றும் குறையாமல் என் கண் எதிரே நிழல் படம் போல ஓடும் அல்லவா? வாழ்க்கை முழுவதும் எங்களது சந்தோஷம் தொடர வேண்டும் என்பதே எங்களின் சிந்தனை.


ஏன் சாரம்பதி ?


சுலபமான பதில் சாம்தி.. சாதி ம் இருவரின் பெயரை சேர்த்து வந்த ஒரு வார்த்தை. தமிழ் வார்த்தையா? இல்லை ஆங்கில வார்த்தையா எனத் தெரியவில்லை. ஆனால் இருவரும் எழுதும் இந்த வலையில் இரு பெயரும் இருப்பதே எங்களது ஆசை..


பெற்றோர்களின் ஆசியுடன் எங்களது வாழ்க்கை பயணத்தை நாங்கள் தொடங்கப் போகின்றோன். இந்த பயணத்தில் நீங்களும் ஒரு பயணிகளாக எங்களுடன் இருந்தால் அம்மகிழ்ச்சிக்கு எல்லை கிடையாது...

என்றும் அன்புடன்,

பார்த்தசாரதி பரமேஸ்வரி

3 comments:

Sakthi-yin Parvaiyil said...
This comment has been removed by the author.
Sakthi-yin Parvaiyil said...
This comment has been removed by the author.
தணிகை said...

நானும் பயணத்தை பார்த்துகொண்டிருக்கிறேன்..//

பார்த்த சாரதி...வாழ்த்துகள்..