Monday, September 15, 2008

அந்த மூன்று வார்த்தைகள்...


"ஆஹா வந்திருச்சு.. ஆசையில் ஓடி வந்தேன்..." , நான் என்னோட காதல் கதையைப்பற்றி எழுத வரலைங்க.. எல்லாம் என்னோட தோழருடயதுதான்.. கஷ்டப்பட்டு ஒரு பொண்ணை ஒரு மூனு மாசமா டேட்டீங் போயிட்டு , இன்னைக்குதான் தைரியம அந்த மூனு வார்த்தையை சொல்ல போறாருங்க..:)இன்னைக்கு சிறப்பு பதிவு இன்றைக்கு..


சரி சரி டேட்டீங்னு சொன்ன உடனே, இங்கிலீஸ் படத்தல வர மாதிரி எல்லாம் நினைக்காதிங்க..இரண்டு பேரும் நாம் கொஞ்ச நாள் மனசு விட்டு பேசி பழகலாம்னு பேசி முடிவெடுத்திருக்காங்க. என்னோட தோழருக்கு அந்த ஃபிலீங் கொஞ்சம் நாள் முன்பே வந்திடுச்சு. ஆனால் அந்த பொண்ணுகிட்ட சொல்லுறதுக்கு ரொம்ப ஊசார இருக்கிறாரு. ஏற்கனவே ஒரு மலைக்கு கூட்டிகிட்டு போய் அந்த வார்த்தையைச் சொல்லலாம்னு தைரியத்தை வர வச்சிருக்காரு ஆனால் முடியல.


இன்னைக்கு அந்த பொண்ணோட பிறந்தநாள். என்னமா ஆட்டம் நம் தோழருக்கு. பெரிய தெடி பேர்[Teddy Bear] , பன்னிரெண்டு சிவப்பு ரோஜாப்பூ, அதுல ஒன்னு தூய வெள்ளை, அப்படினு செம ஜோரா கொண்டாடி இருக்கிறாரு.



இந்த நேரம் நம் தோழர், அந்த பொண்ணுகிட்ட அந்த மூன்று வார்த்தைகளை சொல்லியிருப்பாருனு நினைக்கிறேன்.


"ஐ லவ் யூ"னு சொன்னாலும் சரி " நான் உன்னை காதலிக்கிறேன்"னு சொன்னாலும் சரி.சீக்கிரம் எங்கள் அனைவருக்கும் ஒரு விருந்து இருக்கும்னு நாங்க நினைக்கிறோம்.


அன்புட‌ன் சார‌ம்ப‌தி

1 comment:

ரூபன் said...

ந‌ண்ப‌ருக்கு வ‌ண‌க்க‌ம் .வாழ்த்துக்க‌ள் வெற்றி அடைய‌.