Monday, September 15, 2008

அந்த மூன்று வார்த்தைகள்...


"ஆஹா வந்திருச்சு.. ஆசையில் ஓடி வந்தேன்..." , நான் என்னோட காதல் கதையைப்பற்றி எழுத வரலைங்க.. எல்லாம் என்னோட தோழருடயதுதான்.. கஷ்டப்பட்டு ஒரு பொண்ணை ஒரு மூனு மாசமா டேட்டீங் போயிட்டு , இன்னைக்குதான் தைரியம அந்த மூனு வார்த்தையை சொல்ல போறாருங்க..:)இன்னைக்கு சிறப்பு பதிவு இன்றைக்கு..


சரி சரி டேட்டீங்னு சொன்ன உடனே, இங்கிலீஸ் படத்தல வர மாதிரி எல்லாம் நினைக்காதிங்க..இரண்டு பேரும் நாம் கொஞ்ச நாள் மனசு விட்டு பேசி பழகலாம்னு பேசி முடிவெடுத்திருக்காங்க. என்னோட தோழருக்கு அந்த ஃபிலீங் கொஞ்சம் நாள் முன்பே வந்திடுச்சு. ஆனால் அந்த பொண்ணுகிட்ட சொல்லுறதுக்கு ரொம்ப ஊசார இருக்கிறாரு. ஏற்கனவே ஒரு மலைக்கு கூட்டிகிட்டு போய் அந்த வார்த்தையைச் சொல்லலாம்னு தைரியத்தை வர வச்சிருக்காரு ஆனால் முடியல.


இன்னைக்கு அந்த பொண்ணோட பிறந்தநாள். என்னமா ஆட்டம் நம் தோழருக்கு. பெரிய தெடி பேர்[Teddy Bear] , பன்னிரெண்டு சிவப்பு ரோஜாப்பூ, அதுல ஒன்னு தூய வெள்ளை, அப்படினு செம ஜோரா கொண்டாடி இருக்கிறாரு.



இந்த நேரம் நம் தோழர், அந்த பொண்ணுகிட்ட அந்த மூன்று வார்த்தைகளை சொல்லியிருப்பாருனு நினைக்கிறேன்.


"ஐ லவ் யூ"னு சொன்னாலும் சரி " நான் உன்னை காதலிக்கிறேன்"னு சொன்னாலும் சரி.சீக்கிரம் எங்கள் அனைவருக்கும் ஒரு விருந்து இருக்கும்னு நாங்க நினைக்கிறோம்.


அன்புட‌ன் சார‌ம்ப‌தி

Sunday, September 7, 2008


சண்டை கோழி...



சரி சரி நான் சண்டை கோழி படத்தோட ரிவிய் எழுத வரல. நேற்று வீட்டுல சண்டைங்க..ஒன்னும் பெருசா இல்லை. இந்த எழுதுற பொண்ணு இருக்காலே அவள் தான் வாயை வெச்சுகிட்டு சும்மா இல்லாம தன்னோட அக்காகிட்ட வம்பு இழுத்துட்டா. எல்லாம் கொழுப்புங்க வேற ஒன்னுமில்லை. அதான் உடம்பின் இடை ஏறிக்கிட்டே போகுதுல அப்புறம் எப்படி கொழுப்பு ஏறாம இருக்கும்.


சரி சரி. அம்மா நேற்று ரொம்ப ஃபிலோட பேசிட்டாங்க.. ஆதான் அம்மாகிட்ட சொன்னேன் என்ன அம்மா இப்படி சொல்லிட்டீங்க.. நாங்க இன்னைக்கு அடிச்சுக்குவோம் அப்புறம் நாளைக்கு கூடிக்குவோம்னு.. சரி எதுக்கு அம்மா இப்படி ஃபில் பண்ணாங்கனா.. நான் இப்போ தூது போகனுமேனு.. நான் சொல்லிட்டேன் .அ து எல்லாம் ஒன்னும் வேண்டாம் நாங்க பார்த்துகுறோம்னு.


எங்க, நான் பார்த்துகிறது? இன்னைக்கு காடில அக்கா பேசவே இல்லை. செஞ்ச காரியத்துக்கு கட்டிபிடிச்சு முத்தமா கொடுப்பாங்க.. நானும் பேசலாம்னு வாயைதிறக்கலாம்னு நினைச்ச.. மறுபடியும் சண்டை வந்துச்சின என்ன பண்ணுறது.. அதனால அப்படியே உட்கார்ந்துட்டேன். எல்லாம் ஈகோ தான் வேர என்னானு சொல்லுறது. அதை முதல போட்டு உடைக்கனும்.



சரி திடிர்னு நான் செஞ்ச இரு காரியம் ஞாபகம் வந்திடுச்சு. நாங்க சின்னப்பிள்ளையா இருக்கும் போது ஒரு சண்டைநில நான் கையில இருந்து "screw driver" ரை எடுத்து அக்கா முகத்துக்கு நேரா வீசிட்டேன் . என் நல்ல நேரம் அது அக்கா முகத்துல படல. அக்காவும் சொன்னாங்க.. அப்போ என் கண்ணுல பட்டுருந்த என்ன செஞ்சு இருப்பனு. என்ன முதல்ல அம்மா அப்பாகிட்ட இருந்து நல்ல உதை விழுந்திருக்கும் அதுக்கு பிறகு காலாமெல்லாம் நான் குற்ற உணர்ச்சியோட இருந்திருப்பேன்.



ஆமாம் இது என்ன கதையா இருக்கு, எல்லாம் நான் செஞ்ச தப்பா மட்டும் சொல்லிகிட்டு இருக்கேன். அப்போ அக்கா தப்பே செய்யாத மகானா? நெவர் அதை நான் ஒத்துக்க மாட்டேன் :)நான் இரண்டு தப்பு செஞ்சாலும் அவங்க அட்லீஸ் எனக்கு தெரிஞ்சு ஒரு தப்பாவது செய்வாங்க்க. எனக்கு தெரியாம எவ்வளவோ இருந்திருக்கலாம் :) யாருக்கு தெரியும் [ இன்னைக்கு ஒன்னா தானே காடில வீட்டுக்கு போறோம் நான் காலி..]. நாளை நான் பதிவு எதுவும் போடலனா என் கதி என்னானு நீங்களே யூகிச்சிக்கிங்க.. [ சாமியோவ் என்னை காப்பாத்துப்பா]


நான் சின்ன பள்ளிக்கூடத்தில படிக்கும் போது ஸ்கூல கேலண்டர் கொடுத்தாங்க. நான் அதை பார்த்திக்கிடும் இருக்கும் போது அக்காவும் பார்ர்கனும்னு சொன்னாங்க.. விடுவேனா.. ஒரே கயிர் இழுக்கும் போட்டித்தான். கடைசியில என்னோட இடது கையில் ஒரு கிழிச்சல். இரத்தம் கொட்டோ கொட்டுச்சு. என்னோட வெள்ளக்கலர் சதை தெரிஞ்சுச்சு.


நான் சின்ன பிள்ளைனு அக்கா விட்டு கொடுத்து போயிருக்கனும்ல..
சரி இதுக்கு மேல எழுதினா எங்க நேத்துல சண்டை தீராது . நான் வேலையைப் பார்க்கனும்..வரட்டா...